மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 % அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீத‌ம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 % அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்
Published on

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீத‌ம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை புதுடெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார். தற்போது இருக்கும் 12 சதவீத அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 16 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதார‌ர்கள் பயன்பெறுவார்கள் என்றும் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார். இதனிடையே விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com