40,845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு - மத்திய சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் இதுவரை 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
40,845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு - மத்திய சுகாதாரத் துறை தகவல்
Published on

இந்தியாவில் இதுவரை 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு கருப்பு பூஞ்சை பாதிப்பு தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்,

இதுவரை 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை, 3 ஆயிரத்து 129 ஆக உயர்ந்து உள்ளது என்றும்,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 ஆயிரத்து 940

பேர், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதில், 26 ஆயிரத்து187 பேர் நீரிழிவு நோயாலும், 523 பேர் ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இது தவிர, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட18 முதல் 45 வரையுள்ள நோயாளிகள் 32 சதவீதம் எனவும்,

45 முதல் 60 வயதுடையோர் 42 சதவீதம், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 24 சதவீதம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com