Karnataka | Accident | ஒரே பைக்கில் ஒன்றாக போன 4 பேர் திடீரென குறுக்கே புகுந்த லாரி

x

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூரில் நடந்த கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிக்கபல்லாப்பூர் அருகே அஜவாரா கேட் பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நால்வரும் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்