Lorry Accident | Police | 3D ரோடு ஓவியம்.. விட்டு ஏற்றிய டிரைவர்.. சுவற்றில் மோதிய கண்டெய்னர் லாரி

3D ரோடு ஓவியம்.. விட்டு ஏற்றிய டிரைவர்.. சுவற்றில் மோதிய கண்டெய்னர் லாரி

Lorry Accident | Police | 3D ரோடு ஓவியம்.. விட்டு ஏற்றிய டிரைவர்.. சுவற்றில் மோதி நொறுங்கிய கண்டெய்னர் லாரி

#LorryAccident #Police #3DPainting

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சுவற்றில் வரையப்பட்டிருந்த நிஜமான சாலை போன்ற 3D ஓவியத்தை உண்மையான சாலை என்று நினைத்து கண்டெய்னர் லாரி அந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளான வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி - டேராடூன் விரைவுச்சாலையின் நுழைவாயிலில் உள்ள மொஹப்பவாலா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வரவேற்பு வளைவு சுவரில் வருக என்று எழுதப்பட்டு, நெடுஞ்சாலை போன்ற ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்தச் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியம் மிக துல்லியமாகவும், நிஜமான சாலையின் தொடர்ச்சிபோலவும் காட்சியளித்துள்ளது. இதனால் குழப்பம் அடைந்த லாரி ஓட்டுநர், அதனை உண்மையான வழி என்று நம்பி நேராக சென்று சுவற்றின் மீது மோதியுள்ளார். இந்த மோதலில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநருக்கு பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். அதே சமயம் ஓட்டுநர் ஓவியத்தைப் பார்த்து ஏமாந்ததாக கூறப்பட்டாலும், லாரியின் பிரேக் செயலிழந்ததே விபத்துக்குக் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நெடுஞ்சாலைகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஓவியங்களை வரைவது பாதுகாப்பற்றது என்ற விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com