Hanuman | America | Religion | அமெரிக்காவில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை
அமெரிக்காவில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை
Hanuman | America | Religion | அமெரிக்காவில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை #Hanuman #America #Anjaneya #Statue அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில், 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையின் வரவேற்பு விழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஒரே கிரானைட் கல்லால் செதுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட சிலை, ஏழு ஆண்டுகால கடின உழைப்பில் சிற்பக் கலைஞர்களால் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவ்வளவு உயரமான ஹனுமான் சிலை நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வில், மேரிலாண்ட் மாநிலத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் ஆன்மீக எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
