குலை தள்ளிய 30,000 வாழைகள் சேதம் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சூறாவளி காற்றின் காரணமாக சுமார் 30 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் சூறாவளி காற்றில் சேதம் அடைந்ததால் அந்தப் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இந்த சூழலில், இதுகுறித்து கணக்கெடுப்பு எடுத்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
