காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

புல்வாமா ராணுவ தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
Published on

புல்வாமா ராணுவ தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில்

தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், வீடு ஒன்றில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில் கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமாவில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த வாகனம் தயார் செய்து கொடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த முதாசிர் அகமது கான் மற்றும் ஷஜாத் பட் ஆகியோரும் அடங்குவர்.

X

Thanthi TV
www.thanthitv.com