2ndMarriage | KeralaHighcourt|"இனி ஆண்களின் 2வது திருமணம் முதல் மனைவி கையில்.." -கேரள ஐகோர்ட் அதிரடி

x

"இஸ்லாமிய ஆண்களின் 2வது திருமணம் - முதல் மனைவியின் கருத்து முக்கியம்"

இஸ்லாமிய ஆண்கள் 2வது திருமணத்தை பதிவு செய்வதற்கு முன், முதல் மனைவியின் கருத்தை கேட்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அடிப்படை உரிமைகள், மத உரிமைகளை விட முக்கியமானவை எனவும், 2வது திருமணத்தை எதிர்க்கும் பெண்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். முதல் மனைவிக்கு நியாயம் கிடைத்தால் மட்டுமே, ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்