2ஜி வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு..

2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை செப்டம்பர் இறுதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. எதிர் மனுதாரர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால், சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைத்திருக்க கூடாது என்று அவருடைய தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதி, ஆகஸ்ட் 28 முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com