2 ஜி மேல்முறையீடு வழக்கில் முதல் கட்டமாக சிபிஐ தங்களுடைய வாதங்களை நிறைவு செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அரைமணி நேரம் கால அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கை வருகிற 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம், அன்றைய தினம் ஆ.ராசா தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ளது.