காதலை மறுத்த +2 மாணவி.. ஆத்திரத்தில் ஆசிட் வீசிய இளைஞர்.. கர்நாடகாவை பதற வைத்த சம்பவம்

x

காதலை மறுத்த +2 மாணவி

ஆத்திரத்தில் ஆசிட் வீசிய இளைஞர்

வலியால் துடிதுடித்த மூன்று சிறுமிகள்

கர்நாடகாவை பதற வைத்த சம்பவம்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடபா என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

17 வயதான 12ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள், பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்வுக்காக மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி சீருடையில் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் நேராக, வளாகத்தில் படித்துக் கொண்டிருந்த 3 மாணவிகளை நோக்கி சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, மாணவியை நோக்கி வீசியுள்ளார். இதில், 3 மாணவிகள் மீதும் ஆசிட் பட்டதில், வலியால் கதறி துடித்துள்ளனர்.

மாணவிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, தப்பியோட முயன்ற இளைஞரை பிடித்தனர். பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, காயமடைந்த 3 மாணவிகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கைதான இளைஞர் கேரளாவைச் சேர்ந்த அபின் என்பதும், கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருவதும் தெரியவந்தது.

இதனிடையே, விசாரணைக்குப் பிறகு பேசிய மாவட்ட காண்காணிப்பாளர் ரிஷந்த், கைதான கல்லூரி மாணவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியும், கைதான அபினும் கேரளாவில் ஒரே பகுதியில் வசிப்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி மீது இளைஞருக்கு காதல் உண்டாக, அதனை சிறுமி மறுத்ததாக தெரிவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்