திருப்பதி கோயிலுக்கு ரூ.2 கோடியில் சங்கு, சக்கரம் காணிக்கை
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் சங்கு, சக்கரம் நன்கொடை.........
திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கு மற்றும் சக்கரத்தை நன்கொடையாக வழங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அந்நிறுவனத்தினர், சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாயில் இரண்டரை கிலோ எடையுள்ள தங்க சங்கு மற்றும் சக்கரம் ஆகியவையை நன்கொடையாக வழங்கினர். ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரியிடம் அவற்றை ஒப்படைத்தனர்.
Next Story
