போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ய முயன்ற 19 பேர் கைது

சென்னையில் இருந்து கனடாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ய முயன்ற 19 பேர் கைது
Published on

மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானத்தில் குஜ்ராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 19 பேர் குழுவாக செல்ல வந்திருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 19 பேரின் பாஸ்போர்ட்களும் போலியானது என்று தெரியவந்தது. இவர்கள் ஜெர்மனி சென்று அங்கிருந்து கனடா நாட்டிற்கு வேலைக்கு செல்ல ஏஜெண்டுகளிடம் பணம் தந்து ஏமார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 19 பேரின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர் 19 பேரும் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் குற்றப்பிரிவு போலீசார் போலி பாஸ்போர்ட் தயாரித்து குழுக்களாக அனுப்பிய கும்பலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com