ஒரே ஆண்டில் 17.57 % வளர்ச்சி - முத்தூட்டு மினி பெருமிதம்
முத்தூட்டு மினி பைனான்ஸ் நிறுவனம், 2025 நிதியாண்டில் 4,141 புள்ளி 60 கோடி ரூபாய் சொத்துகளை கையாள்வதாகவும், இது அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும் போது 17 புள்ளி 57 சதவீதம் அதிகம் என்றும் முத்தூட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மேத்யூ முத்தூட்டு தெரிவித்துள்ளார். இதே நேரத்தில் நிறுவனத்தின் வருமாய் 815 புள்ளி 15 கோடி ரூபாயாக உயர்ந்து, 94 புள்ளி 18 கோடி ரூபாய் நிகர லாபத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்தூட்டு மினியின் வளர்ச்சி குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மத்தாய், இந்தியாவில் 948 கிளைகளுடன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப டிஜிட்டல் சேவைகள் மற்றும் கிளை விரிவாக்கத்தின் மூலம் நிறுவனம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதாக கூறினார்.
Next Story
