சரிந்த 170 அடி தாஜியா - மொஹரம் ஊர்வலத்தில் அதிர்ச்சி
மொஹரம் பண்டிகை ஊர்வலத்தில் 170 அடி தாஜியா கீழே விழுந்ததால் பரபரப்பு
உத்தரப்பிரதேசம் அருகே 170 அடி உயரம் கொண்ட தாஜியா, நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில், மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு 170 அடி உயர தாஸியாவை ஊர்வலமாக இழுத்து சென்றனர். அப்போது நிலைதடுமாறிய தாஜியா சரிந்து கீழே விழுந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
Next Story
