17 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை.. ரவுடி ஹாஷிம் பாபா மனைவியின் லேடி பவுன்சர் பகீர் செயல்
- தெருத்தெருவாக ஊர்வளம்...
- பதாகைகளுடன் சாலை மறியல்.....
- புகைக்குண்டுகளுடன் போலீசார்....
- என டெல்லி சலாம்பூர் பகுதியே போராட்டக்காரர்களின் ஆக்ரோஷத்தில் கதிகலங்கி கிடக்கிறது...
- இந்த பரபரப்புகளுக்கு எல்லாம் காரணம் 17 வயது சிறுவனின் கொடூரக்கொலை....
- வீட்டருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒரு சிறுவனை கத்தியால் குத்தி கொன்று போட்டிருக்கிறது ஒரு மர்ம கும்பல்...
- ஒரு லேடி கேங்ஸ்டர் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது தான் இத்தனை களேபரங்களை உருவாக்கி இருக்கிறது.
- இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு கலக்கும் லேடி டான் அப்பாவி சிறுவனை கொன்று போட்டதாக சொல்லப்படும் பின்னணியை அறிய விசாரணையில் இறங்கினோம்....
- கொல்லப்பட்டவர் குணால்... 17 வயதான இவர் சிலாம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை 7 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற குணாலை, ஒரு குறுக்கு தெருவில் வைத்து சுற்றி வளைத்திருக்கிறது ஒரு கும்பல்.
- ஓரிரு வார்த்தைகள் பேசிய உடன், ஆக்ரோஷத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணாலை குத்தி கிழித்துவிட்டு தப்பி சென்றிருக்கிறார்கள்.
- உடனே அக்கம்பக்கத்தினர் குணாலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி குணால் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
- இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், குணாலை கொன்ற குற்றவாளிகளை தேடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- சிறுவனை கொன்றது யார் ? என்ற உண்மை அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்... அது லேடி டான் ஜிக்ரா....
- துப்பாக்கியோடு போஸ் கொடுக்கும் இவரை பார்த்தாலே அந்த பகுதி நடு நடுங்குமாம்...
- சிறுவர்களை கையில் வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வெட்டுகுத்து என தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்திருக்கிறார் இந்த ஜிக்ரா...
- இவர் வேறு யாருமல்ல,...டெல்லியில் பிரபலமான கேங்ஸ்டர் ஹாஷிம் பாபாவின் மூன்றாவது மனைவி சோயா கானின் பாடி கார்ட்.
- சோயாவும் ஒரு கேங்ஸ்டர் தான்.... கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அந்த இல்லதரசி போதை பொருள் விற்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அதன்பிறகு மொத்த பிஸ்னஸையும் ஜிக்ரா தான் கவனித்து வந்துள்ளார். சோயாகானை போலவே ஜிக்ராவுக்கும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவது பிடிக்கும்.
- அவரின் போஸ்டுகள் ஒவ்வொன்றும் ஜிக்ரா ஒரு டான் என்று சொல்லாமல் சொல்லும்... அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்தியபடி ஜிக்ரா போட்ட பதிவு போலீசாரின் கண்ணில் பட, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஜிக்ரா சிறையில் இருக்கும் போது அவரது சகோதரன் சாஹிலுக்கு லாலா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறில் சாஹிலை லாலா கத்தியால் குத்தி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- இந்த நிலையில் தான் சமீபத்தில் ஜிக்ரா சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். ஏரியாவிற்குள் கால் வைத்த உடன் தனது சகோதரனை குத்திய லாலாவை பழிவாங்க துடித்த ஜிக்ரா, அவரை வலைவீசி தேடி இருக்கிறார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
- அப்போது தான், லாலா தனது சகோதரை குத்தும் போது தற்போது கொல்லப்பட்ட குணால் நேரில் பார்த்ததாக தெரிகிறது. இதனால் குணாலிடம் விசாரிக்க ஏரியாவுக்கு சென்றிருக்கிறார் ஜிக்ரா.
- சம்பவத்தன்று இரவு வீட்டருகிலேயே சிறுவன் குணாலிடம் லாலாவை பற்றி விசாரித்துள்ளார்.
- ஆனால் லாலா பற்றிய எந்த தகவலும் தனக்கு தெரியாது என்று குணால் கூறி உள்ளார். இதனால் அங்கே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறாக மாறி இருக்கிறது. ஆத்திரத்தில் ஜிக்ரா சிறுவனை கத்தியால் குத்தி கொன்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது..
- இதற்கிடையில் குணாலின் குடும்பத்தினரும் உறவினர்களும் அப்பகுதி மக்களுடன் ஒன்று சேர்ந்து மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
- கூடவே பல அரசியல் அமைப்புகளும் சேர்ந்து கொள்ள சீலம்பூரே தற்போது போராட்டக்களமாக மாறியது...
- சிலம்பூரில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இது தொடர்பாக ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு வழி செய்வோம் என உறுதி அளித்துள்ளார்.
- குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீஸார் லேடி டான் ஜிக்ராவையும் அவரது கூட்டாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீஸார் லேடி டானையும் அவரது கூட்டாளிகளையும் வலைவீசி தேடி வந்த நிலையில். ஜிக்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
- இளம் பெண் கேங்ஸ்டராக மாறி பல வாலிபர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாலும், கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாலும் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆக்ரோஷமாக தெரிவித்து வருகின்றனர்.
Next Story
