

டெல்லி கலவரம் தொடர்பாக 167 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 885 பேரை பிடித்தும் கைது செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 36 வழக்குகள் ஆயுத சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சிலருடைய கணக்குகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.