இந்த ரேஷன் கார்டுகளுக்கு 15 வகை மளிகை பொருள் இலவசம் - வெளியான சூப்பர் அறிவிப்பு

x

கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி, கேரள அரசு சார்பில் 6 லட்சம் குடும்பங்களுக்கு தேங்காய் எண்ணெய், சர்க்கரை உள்பட 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளன. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓணம் பண்டிகையின்போது அரசு சார்பில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் மஞ்சள் ரேஷன் அட்டை வைத்துள்ள 6 லட்சம் குடும்பங்களுக்கு ஓணம் பரிசுத் தொகுப்புகளை இலவசமாக வழங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அந்த தொகுப்பில், தேங்காய் எண்ணெய், சர்க்கரை, பயறு பருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், மில்மா நெய் முந்திரி பருப்பு உள்ளிட்ட 15 வகை பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்