Kerala Accident | சுவற்றில் மோதி 14 வயது சிறுவன் மரணம் - பதைபதைக்கும் CCTV காட்சி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா அருகே சைக்கிளில் சென்ற 14 வயது சிறுவன் சுவற்றில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூர் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் சைக்கிளில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதியுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேக் பிடிக்காததால், வேகமாக சென்று சுவற்றில் மோதியது தெரியவந்துள்ளது.
Next Story
