மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலை - மராட்டிய அரசு எடுத்த முடிவு
12 பேர் விடுதலை - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் 2006 ஆண்டு நடந்த ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி 12 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது..
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசின் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக வரும் 24 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
