Plane crash | 10 நிமிட தாமதம்... விமானத்தை தவறவிட்டதால் உயிர்பிழைத்த பெண்மணி
10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால் விமான விபத்தில் இருந்து பெண்மணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். குஜராத் மாநிலம் பருச் பகுதியைச் சேர்ந்த பூமி சவுகான் என்பவர், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர், விமான நிலைய செக்-இன் கேட்டிற்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், அவரை விமானத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பூமி சவுகான், விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
Next Story
