10 குழந்தைகள்...கலகலப்பான வீடு...மட்டற்ற மகிழ்ச்சி...

x

கேரளாவில் 10 குழந்தைகளுடன் மட்டற்ற மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர் ஒரு தம்பதி... கண்ணூர் போடூர் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ் - ரம்யா தம்பதி... இவர்களுக்கு மொத்தம் 8 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள்... இவர்களில் 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர்... முதலாவது மகள் 12ம் வகுப்பும், இரட்டையர்களான 8 மற்றும் 9வது குழந்தைகள் அங்கன்வாடியும் செல்கின்றனர். 10வது குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆகிறது... சந்தோஷ் கண்ணூரில் வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார். குழந்தைகளுக்கு காலை மற்றும் மதிய உணவு காலை 7 மணிக்கே தயாராகி விடுமாம்... பள்ளிக்கு கிளம்புவதில் குழந்தைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த ரம்யா..."கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம். எங்கள் பிள்ளைகள் வளர வளர எங்கள் வியாபாரமும் வளர்ந்தது" என்று பூரிப்புடன் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்