வெளுத்து வாங்கும் கனமழை - அருவிகளில் வெள்ளம்.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வெளுத்து வாங்கும் கனமழை - குற்றால அருவிகளில் வெள்ளம்.. மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெளுத்து வாங்கும் மழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சீராக இல்லை. பாதுகாப்பு வளைவை தாண்டி பேரிரைச்சலோடு தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
