விடாமல் கொட்டும் கனமழை - மிதக்கும் குஜராத் - ஆற்றில் சிக்கிய மக்கள்... மீட்கப்பட்ட திக் திக் காட்சி
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கச்சு பகுதியில் உள்ள காந்திதம் (Gandhidham) சாலையில் தண்ணீர் தேங்கியது. அதேபோல் கேதா பகுதியில் சபர்மதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், இரண்டு கிராமங்களுக்குள் புகுந்தது. ராசிக்புரா (Rasikpura), பதாபுரா (Pathapura) ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றினர். பனஸ்கந்தா (Banaskantha ) பகுதியில் சபர்மதி ஆற்றில் சிக்கி தவித்த 8 பேரை எஸ்டிஆர்எப் குழுவினர் மீட்டனர்.
Next Story
