பலத்த காற்றுடன் விட்டு விட்டு கொட்டிய மழை - குளுகுளுவென மாறிய சென்னை
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மழை கொட்டித் தீர்த்தது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனிடையே, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
Next Story
