இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-02-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது திருப்பரங்குன்றம் பகுதி.....
மலைமேல் சென்று வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி.... கடைகள் திறப்பு....
கடவுளை வைத்து கேவலமாக அரசியல் செய்யும் கயவர்களுக்கு இந்தப் புகைப்படம் சமர்ப்பணம்...
முருகருடன் இசுலாமியர் கைக்கோர்த்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் அமீர்...
மதுரை சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்பட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு...
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு...
அரசு பள்ளியில் மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தீவிர விசாரணை...
டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு....
டெல்லியில் பெரும்பான்மையை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கிறது பாஜக...
பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய மூன்று ஆசிரியர்கள் கைது...
மாணவி கர்ப்பம் அடைந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக வெளியான தகவலால் அதிர்ச்சி...
