காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

கடவுள்களின் பெயரால் வாக்கு கேட்கும் பிரதமர் மோடியை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட கோரிய பொதுநல மனு...

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போருக்கு சலுகைகளை அறிவித்த பெங்களூரு நிறுவனங்கள்........

பீர், பட்டர் தோசை, நெய் சாதம், குளிர்பானங்கள் என இலவசங்களும் அறிவிப்பு.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் தொடரும் சஸ்பென்ஸ்..

பிரியங்கா காந்திக்கு எதிராக வருண் காந்தியை களமிறக்க பாஜக திட்டம் எனத் தகவல்.

மணிப்பூரின் உக்ருல் பகுதியில் இன்று வாக்குப்பதிவு.

ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல் துறை.

பெண்களால் நடத்தப்படும் காய்கறி சந்தை பகுதியில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல்..

வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு.


Next Story

மேலும் செய்திகள்