மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கை..

டானா புயல் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மேட்டூரில் கனமழையால் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து பாதிப்பு.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதி...

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்ஃபானை மன்னிக்க முடியாது.....

மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்.

இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை என்றும் விளக்கம்....

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, டி.யு.சி.எஸ். மூலம் ஏலம் விட அனுமதி..

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

X

Thanthi TV
www.thanthitv.com