மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07-10-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

அரசின் கவனக்குறைவால் 5 பேரின் உயிர் பறிபோயிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டம்..

சாக்குபோக்கு சொல்வது சரியல்ல, முதலமைச்சர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்..

வான் படை சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்ததற்கு, தமிழக அரசு உரிய முன்னேற்பாடுகள் செய்யாததே காரணம்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு.

பணமோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு ஜாமின்..

டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..

கேரள நடிகர் சித்திக் சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜர்..

ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் விசாரணை.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..

வகுப்பறையில் இருந்து மாணவர்களை வெளியேற்றி, போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை..

X

Thanthi TV
www.thanthitv.com