இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள்....

உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை...

-----------

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அக்டோபர்12ஆம் தேதிவரை விடுமுறை அறிவிப்பு...

ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒன்பதாம் தேதிவரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு....

-----------------

பசித்த வயிறுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக திக்கற்றவர்களுக்கு திசையாக இருப்பதே திராவிட மாடல் ஆட்சி.....

தென்னிந்திய திருச்சபை பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

-----------------

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலம்....

2 ஆண்டுகளுக்குப் பின் கொடியேற்றத்துடன் தொடங்கியது...

-----------------

திமுக மாவட்ட அமைப்பு தேர்தலில் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறைவு...

7 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய திமுக முடிவு

---------------

மாவட்ட செயலாளர் பதவிக்காக முட்டி மோதும் இடங்களில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை...

திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே .எஸ் இளங்கோவன் தகவல்...

-------------

மக்களை பாதிக்காத வகையில் ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்...

கட்டண விவரங்களை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல்...

------------------

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி நீக்கம்....

அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் நியமித்த நி​லையில், ஈபிஎஸ் நடவடிக்கை...

-----------------


Next Story

மேலும் செய்திகள்