Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-09-2022) | Morning Headlines | Thanthi TV

x

பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின், இன்று துவக்கி வைக்கிறார்...

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு...

------------

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்...

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசிதரூர் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்கின்றனர்...

------------

திமுக உட்கட்சி தேர்தலில் இன்று 16 மாவட்ட நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல்...

தஞ்சை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சென்னையில் குவிந்தனர்...

-------------

தி.மு.க.வின் மொத்த கலாச்சாரமே ஊழல் தான் என்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு...

தமிழகத்தில் நிச்சயம் பா.ஜ.க. கால் ஊன்றும் என்றும் நம்பிக்கை...

-------------

திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்?

அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் எதிர்பார்ப்பு...

---------------

இந்து அறநிலையத் துறை சார்பாக புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா...

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை துவக்கி வைக்கிறார்...

---------------

கோவைப்புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...

தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு...

-------------

தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள்...

கோவை நகரில் பதற்றம் நீடிப்பு - போலீசார் கொடி அணிவகுப்பு...

-------------


Next Story

மேலும் செய்திகள்