இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள், படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.....

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

-----------

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு...----------

வழக்கறிஞர்கள் சட்ட நீதியை மட்டுமல்ல, சமூக நீதியையும் நிலை நாட்ட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....

சட்டம் படித்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாட வேண்டும் என்றும் வேண்டுகோள்...

----------

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதை தடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம்...

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்...

----------

வழக்குகளில் இருந்து தப்பிக்கவே அமித்ஷாவை சந்தித்துள்ளார் ஈபிஎஸ்...

தனது குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் செல்வராஜ் சாடல்...

--------

தமிழகத்தில் அரசு அறிவித்து, செயல்படுத்தாத திட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம்...

உலக தமிழ்ச்சங்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து...

--------

தமிழகத்தில் அரசு அறிவித்து, செயல்படுத்தாத திட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம்...

உலக தமிழ்ச்சங்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து...

------------

ஸ்ரீபெரும்புதூர் அருகே திமுக வார்டு உறுப்பினர் படுகொலை வழக்கு...

தலைமறைவான பெண் தாதா லோகேஸ்வரி உள்பட 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்...

-------------தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை என அரசு தரப்பு உறுதி...

அரசு தரப்பு உத்தரவாதத்தை ஏற்று வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

--------

தமிழகம் முழுவதும் புதன்கிழமை, ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

---------------

தமிழகம் முழுவதும் புதன்கிழமை, ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

-----------

தமிழகத்தில் ஃப்ளு காய்ச்சலை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருமடங்கு அதிகரிப்பு...

கடந்த மாதங்களோடு ஒப்பிட்டு சுகாதாரத்துறை அறிக்கை...

-------மதுராந்தகம் அருகே வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததால் பச்சிளங்குழந்தை பலியான சோகம்....

உறவினர்கள் சாலைமறியல்... மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்....

---------

ஊக்கத்தொகை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்...

17 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு....

---------

சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் தீண்டத்தகாத சாதி எது என்ற கேள்வியால் வெடித்தது சர்ச்சை....

தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பாட புத்தகத்தில் உள்ள கேள்வியே கேட்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம்...

---------

நெல்லை அருகே கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே தகராறு....

போலீஸ் பாதுகாப்புடன் சாமி ஊர்வலம் நடத்தப்பட்டதால் பரபரப்பு....

------------

அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு

செய்யப்படுகின்றன?

முறைகேட்டில் ஈடுபட்ட தேனி சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி...

--------

மோசடி ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை....

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்...

--------------

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 12 பேர் தமிழகத்தில் அதிகளாக தஞ்சம்....

விசாரணைக்கு பின் மண்டபம் மறுவாழ்வு முகாமில் தங்கவைப்பு...

---------

திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்...

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டதாக பரபரப்பு அறிக்கை...

------------

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியது ஏன்?

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்...

----------

சாதி குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது வெட்கக்கேடானது...

ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் காட்டம்...

-----------

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

எல்லா சமுதாயத்தினருக்கும் பொறுப்பு கிடைக்க வேண்டும் என்ற கோணத்திலேயே தான் பேசியதாக விளக்கம்....

-----------

இந்துக்கள் பற்றிய திமுக எம்.பி. ஆ.ராசா கருத்து கூறிய நிலையில், சூத்திரர் அல்லாதவர்களுக்கு கோபம் வருவது ஏன்?

எச்.ராஜா சூத்திரரா என்றும் திருமாவளவன் கேள்வி...

-----------

மதுரை காமராஜர் பல்கலைகழக தொலைதூர கல்வியில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சான்றிதழ் அளித்த விவகாரம்...

பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு....

-----------
கேரளாவில் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்...

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளும் மும்முரம்...

---------

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் மீது குற்றம் சுமத்தவோ, மன உளைச்சல் ஏற்படுத்தவோ, கைது செய்யவோ கூடாது.....

ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை...

------

குஜராத்தி திரைப்படமான CHELLO SHOW ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை....

இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு...

--------

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு....

15 பேர் கொண்ட அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமனம்...

--------Next Story

மேலும் செய்திகள்