இன்றைய தலைப்பு செய்திகள் (20-09-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்

திமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு...

மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை...

--------------------

"தமிழகம் தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்"

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களிடம் நியாயமான காரணம் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று விமர்சனம்...

தமிழகம் விரைவில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் என்றும் கருத்து...

---------------------

மாநில கல்வி கொள்கை - கருத்துக்கேட்பு

மாநில கல்விக் கொள்கை உருவாக்குவது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்களிடம் நெல்லையில் இன்று கருத்துக்கேட்பு...

வரைவு திட்ட அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படுமென எதிர்பார்ப்பு...

--------------------------

உள்துறை அமைச்சருடன் சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு...

உறவினர்களை காப்பாற்றவே ஈபிஎஸ் டெல்லி பயணம் என ஓ.பி.எஸ் தரப்பு விமர்சனம்...

---------------------------

செப்.22 முதல் விண்ணப்பம்

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்....

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று அறிவிப்பு...

-------------------

பாஞ்சாகுளம் தீண்டாமை - மேலும் ஒருவர் கைது

பாஞ்சாகுளம் தீண்டாமை விவகாரத்தில் இன்று மேலும் ஒருவர் கைது...

பட்டியலின மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளிக்க உத்தரவு...

--------------------


Next Story

மேலும் செய்திகள்