இன்றைய தலைப்பு செய்திகள் (11-09-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

மின் கட்டணம் - விமர்சனமும், விளக்கமும்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இன்று வலியுறுத்தல்...

கட்டண உயர்வு மக்களை வெகுவாக பாதிக்கும் என முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோரும் கருத்து....

மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் கட்டணம் குறைவு தான் என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்...

-----------------------------

"ஓ.பி.எஸ். முட்டுக்கட்டையாக இருக்கிறார்"

அதிமுகவில் ஜனநாயக முறையில் தலைமை மாற்றத்துக்கு, ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக இருக்கிறார்...

உச்சநீதிமன்றத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் பரபரப்பு குற்றச்சாட்டு...

-----------------------------

கண்ணீர் மல்க பிரியாவிடை

பால்மொரல் அரண்மனையில் இருந்து, எடின்பர்க் அரண்மனைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது, ராணி எலிசபெத்தின் உடல்...

வழிநெடுகிலும் காத்திருந்து, கண்ணீர் மல்க பொதுமக்கள் பிரியாவிடை....

இங்கிலாந்து ராணி மறைவுக்கு, இந்தியாவில் இன்று தேசிய துக்கம் அனுசரிப்பு...

-----------------------------

கேரளாவில் ராகுல் நடைபயணம்

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் இன்று நடைபயணத்தை தொடங்கினார், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி...

தொண்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து பிரமாண்ட பேரணி...

மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்...

-----------------------------

"4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி"

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, உதகை ஆகிய பகுதிகளில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க திட்டம்...

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தகவல்...

-----------------------------

எழுத்தாளர் சங்க தேர்தல் - பாக்யராஜ் வெற்றி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில், இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான அணி இன்று அமோக வெற்றி...

எழுத்தாளர்களுக்கு ராயல்டி கொடுக்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என பாக்யராஜ் தகவல்...

-----------------------------


Next Story

மேலும் செய்திகள்