இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-08-2022) | 11 PM Headlines | Thanthi TV

x

தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு பரவும் தக்காளி காய்ச்சல்.....

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்...

---

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை விரிவுபடுத்த 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு....

முன்னுரிமை அடிப்படையில் 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு அனுப்புமாறு, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்....

---


திமுக அமைச்சர் பேசுவதை கண்டும் காணாமல் இருக்கிறோம் என நினைக்க வேண்டாம்....

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து...

---

பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் என திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேட்டி....

பரந்தூர் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதி...

----

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது பணமோசடி வழக்குப்பதிவு...

புதிய மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை...

---

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னரும் அரசு இல்லத்தில் 6 மாதங்கள் குடியிருக்கலாம்...

விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு....

--


பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.....

மாநில கல்வி கொள்கையை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்...

--

விருதுநகர் அருகே பள்ளி சென்ற இரு குழந்தைகள் கடத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி.....

மர்மநபர்களை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை....


---


அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்திச்சென்று நகை பறிப்பு....

சிசிடிவி காட்சி அடிப்படையில் 6 பேரை கைது செய்து போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை....---Next Story

மேலும் செய்திகள்