இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-10-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவுக்கு எதிர்ப்பு...

சென்னை சேப்பாக்கம், பொதிகை தொலைக்காட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. மாணவர் அணி கைது...

"இந்தி மொழியை வைத்து, கடந்த 50 ஆண்டுகளாக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த முயற்சி..."

சென்னையில் பொதிகை தொலைக்காட்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

ஆளுநர் நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து...

"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு விட்டுப் பாடியதால் அதிர்ச்சி...

"திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்..."

சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டு...

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்... 

X

Thanthi TV
www.thanthitv.com