போலி தங்கக் காசுகளை வாங்கி ஏமாந்தவர் தற்கொலை முயற்சி
குமரி மாவட்டத்தில், 12 லட்சம் ரூபாய்க்கு போலி தங்க காசுகளை வாங்கிய நபர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் லீ புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தன்னிடம் வேலை செய்து வந்த அருள்தாஸ் என்பவரை ஏமாற்றி போலி தங்ககாசுகளை அசல் எனக்கூறி 12 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். தங்க காசு போலியென தெரியவந்த நிலையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் 5 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி தந்த நிலையில் மீத பணத்தை தராமல் இழுக்கடித்துள்ளார் பால்ராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் தாஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய பால்ராஜை தேடி வருகின்றனர்."பித்தளையை தங்ககாசு என விற்பனை செய்துவிட்டார்"
