`விடுதலை’ ஆனதும் துள்ளி குதித்து ஓடிய பென்குயின்கள் - வைரலாகும் க்யூட் வீடியோ
சிலியில் பென்குயின்கள் கூண்டை விட்டு உற்சாகம் கரைபுரள கடலுக்குத் திரும்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. சிலி கடற்கரையில் ஆதரவின்றி நின்ற பென்குயின் குஞ்சுகளை மீன்வளத் துறையினர் மீட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில், அவை வளர்ந்து தனித்து வாழும் தகுதியை எட்டியதால், 9 பென்குயின்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன. அதிகாரிகள் கூண்டைத் திறந்ததும் பென்குயின்கள் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன. சிலியில் பென்குயின் அரியவகை உயிரினமாக கருதப்படுவதால், அதன் எண்ணிக்கையைப் பெருக்க அந்நாட்டு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
Next Story
