யாரும் எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட பிரான்ஸ் - ஷாக்கில் அமெரிக்கா

x

யாரும் எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட பிரான்ஸ் - ஷாக்கில் அமெரிக்கா

பாலஸ்தீனம் குறித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் Emmanuel Macron கருத்தை நிராகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நீடிக்கும் சூழலில்,

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிப்பதாகவும், வரும் செப்டம்பரில் நடைபெறும் 80வது ஐ.நா பொதுச்சபை அமர்வில் இதனை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியிருந்தார்.

இதனை அமெரிக்கா நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, Marco Rubio, இந்த பொறுப்பற்ற முடிவு ஹமாஸ் பிரச்சாரத்திற்கு உதவும்... அமைதியை சீர்குலைக்கும் என்றும், அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் கன்னத்தில் அறைந்ததுபோல் ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்