ENG Vs SA T20 2025 | T20-யில் 304 ரன்கள் குவித்து வரலாற்றையே புரட்டி போட்ட இங்கிலாந்து
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற 2 வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை குவித்தது. பின் இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.
Next Story
