Gpay, Phonepe யூஸ் பண்றீங்களா.. நாடே கொண்டாடும் இன்ப அதிர்ச்சி அறிவிப்பு
செப். 15 முதல் யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு
வரும்15-ஆம் தேதி முதல் யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 2 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
தற்போது யுபிஐ மூலம் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டுமென வணிகர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், 10 லட்ச ரூபாயாக உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது.
வரும் 15-ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
அந்த வகையில், யுபிஐ வாயிலாக காப்பீடு பிரீமியம், வங்கிக் கடன், பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் முதலீடுகளுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தனிநபர் ஜி-பே மூலம் ஸ்கேன் செய்து வணிகர்களுக்கு செலுத்தும் தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம், தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில், உச்ச வரம்பான 1 லட்ச ரூபாயில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
கிரெடிட் கார்டு மூலம் ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம்.
இருப்பினும், நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6 லட்ச ரூபாய் வரை மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
