காதலனுடன் தகராறு - இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

x

சென்னை நெற்குன்றம் செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் தீபிகா(23), ஜிம் ட்ரைனர் ஆகவும் மற்றும் தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தார்.

தீபிகா முன்னதாக எதிர் வீட்டில் வசித்து வந்த ஏசி மெக்கானிக்கான அருள் என்பவரை காதலித்து வந்துள்ளார், அருள் சிறிது சிறிதாக தீபிகாவிடமிருந்து நான்கு லட்சம் பணம் மற்றும் நான்கு சவரன் நகைகளை பெற்றுள்ளார். குறிப்பாக இது சம்பந்தமாக காதலர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே கடந்த ஆண்டு தீபிகாவை காதலன் அருள் தாக்கியுள்ளார். இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் இருவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று இதேபோல் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வேலை செய்யப் போவதாக கூறி வீட்டின் அறையில் இருந்த தீபிகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தீபிகாவின் சகோதரர் தினேஷ் அளித்த தகவலின் பெயரில் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே எம் சி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் இளம் பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் காதலித்து வருவதால் தீபிகா பேன் கார்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அருளுக்கு கொடுத்ததாகவும், அதை பயன்படுத்தி அருள் தீபிகாவிற்கு தெரியாமல் சுமார் ஒரு லட்சம் வரை லோன் ஆப்பில் கடன் பெற்றதாகவும், இ எம் ஐ தீபிகாவின் வங்கி கணக்கில் இருந்து போகும்போது இதுகுறித்து அருள் இடம் கேட்டபோது மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. நேற்றும் பிரச்சனை ஏற்படவே தீபிகா அருளுக்கு whatsapp மூலமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வியூ ஒன்ஸில் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார். இதைக் கண்ட அருள் தீபிகாவின் தோழிக்கு தகவல் தெரிவித்த போதும் தீபிகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக தீபிகா இறப்பதற்கு முன்னதாக அவரது இன்ஸ்டாகிராம் ஐடியில் தனது காதலனுடன் வேறொரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனால் தீபிகாவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தீபிகாவின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளதால் தலைமறைவாக உள்ள காதலனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்