Diella Albania's new AI minister | அதிரடி முடிவெடுத்து AIக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பொறுப்பு

x

ஊழலை ஒழிக்க AI க்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய நாடு

உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டை chat bot அதிகாரப்பூர்வ அமைச்சாரக நியமித்து அல்பேனியா நாடுஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பேனியா நாட்டில்

“டியெல்லா“ என பெயரிடப்பட்ட ஏ.ஐ பாட், அந்நாட்டு கேபினெட் அமைச்சராக பொறுப்பு வழங்கி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். டியெல்லா என்றால் அல்பேனிய மொழியில் சூரியன் எனப் பொருள். அரசு டெண்டர்களில் நடைபெறும் ஊழல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு டியெல்லாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிக்கப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்