காயங்களுடன் இறந்து கிடந்த மான்- வனத்துறை விசாரணை
தென்காசி மாவட்டம், கடையம் அருகே ராமநதி அணை வடிகால் நீரோடையில் காயங்களுடன் இறந்து கிடந்த மிளா மானை வனத்துறையினர் மீட்டனர். மானின் வயிற்றுப் பகுதியில் ரத்தக்காயம் இருந்ததால், வனவிலங்கு ஏதேனும் தாக்கியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட மிளாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Next Story
