5 வயது சிறுவனை இழுத்து சென்ற முதலை - முதலையின் தாடையை கிழித்து மகனை மீட்ட தாய்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலையுடன் போராடி தனது 5 வயது மகனை மீட்ட தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்கியா எனும் கிராமத்தில் வீர் என்ற 5 வயது சிறுவன், வீட்டிற்கு வெளியே உள்ள கால்வாய்க்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கால்வாயில் இருந்து திடீரென வெளியேறிய முதலை சிறுவனின் காலை பிடித்து கால்வாய்க்குள் இழுத்துச் சென்றுள்ளது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த தாயான மாயா, மகனை காப்பாற்ற முதலையிடம் நீண்ட நேரம் போராடியுள்ளார். இறுதியாக இரும்பு ராடை கொண்டு முதலையின் தாடையில் பலமாக தாக்கி மகனை மீட்டுள்ளார்.
Next Story
