CP Radhakrishnan | "வாக்களிக்க MP-க்களுக்கு ரூ.20 கோடி" - துணை ஜனாதிபதி தேர்தல்.. திடுக் தகவல்
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் - திரிணாமூல் எம்.பி. குற்றச்சாட்டு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்குகளை பெற சில எம்பிக்களுக்கு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 425 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை விட கூடுதலாக சுமார் 25 வாக்குகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
இதன்மூலம், இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சிபி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி மாறி வாக்களித்திருக்கலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி,
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தங்கள் கட்சியின் அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டு சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவாக வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால் எதிர்க்கட்சிகள் வாக்குகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டதா? அல்லது கட்சி மாறி வாக்களித்தார்களா என்பதை கூறுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எம்பிக்களின் வாக்குகளை பெற ஒவ்வொருவருக்கும் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அபிஷேக் பானர்ஜி,
பிரதிநிதிகளை விலைக்கு வாங்கலாம்... ஆனால் மக்களை விலைக்கு வாங்க முடியாது என்று கூறினார்.
