ரயில் மோதி மாடுகள் உயிரிழப்பு - 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சப்தகிரி விரைவு ரயிலில் மாடுகள் சிக்கி உயிரிழந்ததால், ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற சப்தகிரி விரைவு ரயில் திருத்தணிக்கு வந்தபோது, தண்டவாளத்தில் இருந்த 2 மாடுகள் அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. இதனால் ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே லெவல் கிராஸிங்குக்கு நேராக ரயில் நின்றதால் தண்டவாளத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாணவ-மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர், ரயிலில் ஏறி இறங்கி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.
Next Story
