அரளி விதையை உண்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதி - கணவர் உயிரிழப்பு

x

கம்பம் அருகே தம்பதியினர் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் கணவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேஸ்வரன் என்பவர், கழிவு ஆயில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கம்பெனியில் இருந்த கழிவு ஆயில் பேரல் ஒன்றை, அதன் உரிமையாளர் ராஜாராமிடமே

18 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனை அறிந்த அவர் 3 நாட்களுக்குள் பணத்தை திருப்பி தருமாறு கெடு விதித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான முருகேஸ்வரன் தனது மனைவி முத்துச்செல்வியுடன் அரளி விதையை அரைத்து சாப்பிட்டதில் முருகேஸ்வரன் உயிரிழந்தார். அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்