தமிழ்நாட்டில் 125 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்
தமிழ்நாட்டில் 125 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்
தமிழகத்தில் 125 சட்டமன்ற தொகுதிகளை குறிவைத்து நாம் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர் கேட்டுக் கொண்டார். நெல்லையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற வாக்குத் திருட்டு விழிப்புணர்வு மாநாட்டில் பேசிய அவர், சுதந்திர போராட்ட காலம் மட்டுமல்லாமல், இப்போதும் தமிழ்நாடு புரட்சி செய்யும் மாநிலமாக உள்ளது என்று தெரிவித்தார். வாக்கு திருட்டு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், ராகுல் காந்திக்கு பக்க பலமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
