"மாஸ்கோவுக்கு வாங்க ஜெலன்ஸ்கி.." புதின் வார்னிங் அழைப்பு

x

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான தனது சந்திப்பு வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், உண்மையிலேயே ஜெலன்ஸ்கி தம்மை சந்திக்க விரும்பினால் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு அவர் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிபருக்கு 100 சதவீத பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் உக்ரைனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்பு அளிக்க 26 நாடுகள் உறுதி அளித்திருப்பதாக அறிவித்திருந்த நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய துருப்புகள் அனுப்பப்பட்டால் அவை ரஷ்யாவின் இலக்குகளாக இருக்கும் என்று புதின் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்